அகத்தியர் ஆஸ்ரமம் சஞ்சீவிமலை - Agathiyar ashram
அகத்தியர் ஆஸ்ரமம் சஞ்சீவிமலை - Agathiyar ashram
அகத்தியர் ஆஸ்ரமம் சஞ்சீவிமலை - அறிமுகம்
மகத்துவம் பொருந்திய அகத்தியர் பெருமான் தென் தமிழகத்தில் வாழ்ந்த புனிதமான
மலைகளுள் ஒன்றுதான் சஞ்சீவி மலை ஆகும்.இது திண்டுக்கல் மாவட்டத்தில்
அமைந்துள்ளது.இதனை சிறுமலை என அழைக்கின்றனர். இம்மலை கடல் மட்டத்திலிருந்து 1600 - மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இராமாயண காலத்தில் இலங்கையில் ஸ்ரீ ராமனுக்கும், இராவணனுக் கும்
நடந்த யுத்தத்தில் இந்திரஜித் ஏவி விட்ட நாகாஸ்திரத்தால் ராமனும், லட்சுமணனும் மூர்ச்சை ஆகி விட இவர்களை காப்பாற்ற அனுமன் இமயமலைப் பகுதியில் இருந்து சஞ்சீவி
மலையை பெயர்த்து எடுத்துச் செல்லும் போது ஒரு பகுதி திண்டுக்கல்லில் விழுந்து
மலையாக உருவெடுத்தது இதுவே இன்று சிறுமலை [ சஞ்சீவி மலை ] என அழைக்கப்படுகின்றது.
இம்மலையில் வேறு எந்த மலைகளிலும் காணாத பல்வேறு அரிய மூலிகைகள்,தாவரங்கள் உள்ளன.இந்த சஞ்சீவி மலை அகத்தியர்
பெருமான் ஆஸ்ரமம் அமைத்து தனது சீடர்களுடன் தவம் செய்து வாழ்ந்த புண்ணிய
பூமியாகும்.
சஞ்சீவி
மலையின் மகத்துவங்கள் அடுத்த பதிவில்...
நன்றி !
அகத்தியர் ஆஸ்ரமம் - குழு
அகத்தியர் ஆஸ்ரமம் - சஞ்சீவி மலை - திண்டுக்கல்
agathiyar.ashram@gmail.com
cell : 9655688786 - 9095590855
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.